மகள், மனைவியுடன் ரேஸிங் களத்தில் தல அஜித்; வைரல் வீடியோ இதோ.!
சென்னை: கேக்கில் பூஞ்சையுடன் ஆனந்தமாய் நெளிந்த புழுக்கள்.. கர்ப்பிணி மனைவி, குழந்தை சாப்பிட்டதாக வாடிக்கையாளர் குமுறல்.!
சென்னையில் உள்ள போரூர் பகுதியில், மெக்ரெனட் ரெஸ்டாரண்ட் செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்குச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர், கேக் வாங்கி இருக்கிறார்.
இதனிடையே, கேக்கில் புழுக்கள் நெளிந்ததாக தெரியவருகிறது. இதனால் அதிர்ந்துபோன வாடிக்கையாளர், கேக்கை மீண்டும் கடைக்கு எடுத்து வந்து கடையில் நியாயம் கேட்டு இருக்கிறார்.
கடையின் ஊழியர்களிடம் சரமாரி கேள்வி
தனது கர்ப்பிணி மனைவி கேக்கை சாப்பிட்ட நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரின் இந்த நிலைக்கு யார் பொறுப்பு ஏற்பது?, பூஞ்சை படர்ந்த கேக்கை எதற்காக விநியோகம் செய்கிறீர்கள்?, உங்களால் இதை உண்ண முடியுமா? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: ஹவாலா பணம் எடுத்து வருவோரை குறிவைத்து மோசடி; காவலர், வருமானவரித்துறை அதிரடி கைது.!
கேக் மாதிரி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கட்டுள்ளதாக தெரியவரும் நிலையில், மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. கடைகளில் உணவுகள், சிற்றுண்டிகளை வாங்கி வரும் நபர்கள், அது தரமானதாக இருக்கிறதா? என சோதித்து பார்க்காமல் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு கொடுக்க வேண்டாம்.
நெளிந்த புழு, பூஞ்சை படிந்த பழைய கேக்கை கொடுத்த போரூரில் உள்ள மெக்ரெனட் பேக்கரி கடையில் வாடிக்கையாளர் சரமாரி கேள்வி.. திருதிருவென முழித்த ஊழியர்.. pic.twitter.com/hBf7oyZW8D
— Unmai Kasakkum | உண்மை கசக்கும் (@Unmai_Kasakkum) January 12, 2025
வீடியோ நன்றி பாலிமர் தொலைக்காட்சி
இதையும் படிங்க: மனவளர்ச்சி குன்றிய மாணவி பலாத்கார விவகாரம்; தோழி அதிரடி கைது.!