வருமானவரித்துறை சோதனை விவகாரம்; எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் ரூ.750 கோடி வரி ஏய்ப்பு.!



  JR Metals Income Tax Raid 12 Jan 2025 

தமிழ்நாட்டில் உள்ள 26 க்கும் மேற்பட்ட இடங்களில், சமீபத்தில் வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறவினரான, சேலத்தை சேர்ந்த ராமலிங்கம் மற்றும் அவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்திலும் சோதனை நடந்தது. 

ரூ.750 கோடி வரி ஏய்ப்பு உறுதி

இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், ராமலிங்கம் தரப்பில் ரூ.750 கோடி அளவில் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், ரூ.10 கோடி ரொக்கத்தொகையும் வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #Breaking: இது ஜனநாயக படுகொலை.. இருட்டடிப்பு: எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்.!

பூக்கடை, திருவொற்றியூர் என சென்னை நகரின் பல இடங்களிலும், சேலம், ஈரோடு ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது. ராமலிங்கத்தின் கட்டுமான நிறுவனம் ஈரோடு நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னை: கேக்கில் பூஞ்சையுடன் ஆனந்தமாய் நெளிந்த புழுக்கள்.. கர்ப்பிணி மனைவி, குழந்தை சாப்பிட்டதாக வாடிக்கையாளர் குமுறல்.!