#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆர்.ஜே பாலாஜியின் எல்கேஜி படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்; யார் தெரியுமா?
வருகின்ற 22ஆம் தேதி வெளியாகும் ஆர்.ஜே பாலாஜியின் எல்கேஜி படத்திற்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எல்.கே.ஜி. இப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நாயகியாக பிரியா ஆனந்த், ஆர்.ஜே.பாலாஜியின் தந்தையாக நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ள நிலையில்,அதனை வெளியிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகின்ற 22ம் தேதி படம் வெளியாகவிருப்பதால் படக்குழு விளம்பரப்படுத்தும் பணிகளைத் துவக்கியுள்ளது. குடியரசு தினத்தன்று முதல் பாடல் மற்றும் போஸ்டரை வெளியிட்டது. அந்த போஸ்டருக்கே எதிர்ப்புகள் கிளம்பின.
இந்நிலையில் ஆர் ஜே பாலாஜியின் எல்கேஜி படத்திற்கு கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுவும் வாழ்த்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே, தேர்தல் தேதி அறிவிப்பு....! #LKGFromFeb22😍 pic.twitter.com/x5LYWFNPh0
— LKG (@RJ_Balaji) February 11, 2019
அதில், “ஒரு வீரராக கிரிக்கெட் விளையாடுவது எளிது, ஆனால் படத்தில் ஒருவர் நடிப்பது கடினம். ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என சில வார்த்தைகளை தமிழில் பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார் கபில் தேவ்.
ஆர்ஜே பாலாஜி படத்தில் நடிப்பதோடு, அவ்வப்போது பிரபல விளையாட்டு சேனலில் கிரிக்கெட் போட்டியின் போது பேசி வருகின்றார். அதனால் பல கிரிகெட் வீரர்களை நேரில் பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்படி கபில் தேவ்-ஐ நேரில் பார்த்து பேசும் போது அவர்களிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது தற்போது பாலாஜிக்கு வாழ்த்து கூறும் அளவிற்கு சென்றுள்ளது.
Legend and Amazing human, Kapil Paaji ❤️ #LKGfromFeb22 pic.twitter.com/ymnMoTjW3I
— LKG (@RJ_Balaji) February 12, 2019