தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
தவறை சுட்டிக்காட்டி உதயநிதி ஸ்டாலின் வைத்த கோரிக்கை.! அதிரடியாக கர்ணன் படக்குழு செய்த மாற்றம்.!
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘கர்ணன்’. இப்படம் கொடியன்குளம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இச்சம்பவம் 1997 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் நடப்பதுபோல் காட்டப்பட்டுள்ளதாக படம் பார்த்தவர்கள் விமர்சனம் செய்து வந்தனர்.
’கர்ணன்’ படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியதோடு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ’கர்ணன்’ படத்தில் அச்சம்பவம் 1997-ல் திமுக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளதை மாற்றக்கோரி தயாரிப்பாளர் தாணுவிடமும் இயக்குநர் மாரி செல்வராஜிடமும் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டியவற்றை கர்ணன் படக்குழு சரி செய்தது. படத்தில் குறிப்பிடப்பட்ட ஆண்டு 90-களின் பிற்பகுதியில் என்று மாற்றம் செய்யப்பட்டது.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், படைப்பிலுள்ள பிழையை சுட்டிக்காட்டுகையில் அதை திருத்திக்கொள்வது வரவேற்புக்குரியது. கொடியன்குளம் கலவரம் 1995-ல் அதிமுக ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர். அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. எனினும்'90-களின் இறுதியில்' என திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும் அதிருப்தி குரல்கள் எழுகின்றன. எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.