#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மகளுக்கு 25 வது பிறந்தநாள்! மனைவி மீண்டும் கர்ப்பமாக இருப்பதை உற்சாகமாக அறிவித்த பிரபல நடிகர்!
பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைபடங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் சயீப் அலிகான். இவர் கடந்த 1991-ம் ஆண்டு நடிகை அம்ரிதா சிங்கை திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களது மகள் சாரா அலிகான் அவர் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
அதனை தொடர்ந்து சயீப் அலிகான் கடந்த 2012-ம் ஆண்டு நடிகை கரீனா கபூரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்றரை வயதில் தைமூர் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தற்போது 40 வயதாகும் நடிகை கரீனா கபூர் மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.
இதுகுறித்து கணவன் மனைவி இருவரும் இணைந்து ஒன்றாக வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களது குடும்பத்தில் விரைவில் இன்னொரு நபரை எதிர்பார்க்கிறோம். இதனை உங்களுக்கு தெரியபடுத்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். எங்களது நலம் விரும்பிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் தனது முதல் மனைவியின் மகள் சாரா அலிகானின் 25-வது பிறந்தநாளன்று சயீப் அலிகான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.