பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வேற லெவல்.! மண்வாசனையோடு சும்மா குத்தாட்டம் போட வைத்த கர்ணன் பட பண்டாரத்தி புராணம் பாடல்! கொண்டாடும் ரசிகர்கள்!
தமிழ் திரையுலகில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக வலம் வரும் தனுஷ், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துவரும் திரைப்படம் கர்ணன் . இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார் .
இந்த படத்தில் ஹீரோனாகரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் அவர்களுடன் யோகி பாபு ,கௌரி கிஷன் ,லட்சுமி பிரியா ,லால் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.
#Karnan song 2 #PandarathiPuranam https://t.co/tqEUKj5Rb6 a special special thanks to the sweetest Deva sir. A @Music_Santhosh musical
— Dhanush (@dhanushkraja) March 2, 2021
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற கண்டா வர சொல்லுங்க என்ற பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இப்படத்தில் வரும் மற்றொரு பாடலான பண்டாரத்தி புராணம் தற்போது வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மேலும் இதனை தனுஷ் ரசிகர்கள் பெருமளவில் வைரலாக்கி வருகின்றனர்.