பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அது வேணாம்! சர்ச்சைகளை தடுக்க கர்ணன் படக்குழு எடுத்த புதிய முடிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்துவரும் தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் ரெஜிஷா விஜயன், யோகி பாபு, லால், லட்சுமி பிரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் கர்ணன் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது கர்ணன் படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. கர்ணன் படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில்
பண்டாரத்தி புராணம் என்ற பாடலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இத்தகைய சர்ச்சையால் பாண்டாரத்தி என்ற பெயர் மஞ்சனத்தி என மாற்றப்பட்டது.
கர்ணன் படம் எந்த மாதிரியான கதை என தெரியாத நிலையில், ட்ரைலர் வெளியானால் தெரிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ட்ரைலர் வெளியானால் தேவையில்லாத பல சர்ச்சைகளும் கிளம்பலாம் என படக்குழுவினர் ட்ரெய்லர் வேண்டாம் எனவும், படத்தை நேரடியாகவே வெளியிடலாம் எனவும் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.