#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா.. சூப்பர்ஸ்டாருக்கு குடைப்பிடித்த அமைச்சர்.. இதுதான் காரணமா?..! புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்..!!
![Karnataka Minister Serve Rajinikanth](https://cdn.tamilspark.com/large/large_kudai-54742.jpg)
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக அறிமுகமாகி தற்போது வரை கலக்கி வருபவர் ரஜினிகாந்த். இவர் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.
அத்துடன் ரஜினி சென்னையில் இருந்து பிரைவேட் ஜெட்டில் பெங்களூர் சென்ற வீடியோ மற்றும் போட்டோக்களும் இணையதளத்தில் வைரலாகியிருந்ததை தொடர்ந்து, கொட்டும் மழையிலும் சூப்பர்ஸ்டார் ரஜினி அந்த விழாவில் பேசினார்.
மேலும் ரஜினிகாந்துக்கு கர்நாடகா அமைச்சர் முனிரத்தினம் குடைபிடித்து இருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இதனை தங்களது இணையதளபக்கத்தில் வெளியிட்டு பெருமிதம்கொண்டுள்ளனர்