#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தப்புதான், என்னை மன்னிச்சிடுங்க... நடிகர் விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்!! யாரு தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கருணாகரன். இவர் எப்பொழுதும் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கக் கூடியவர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு வெளிவந்த சர்க்கார் படம் இசை வெளியீட்டு விழாவில் அரசியலை மையமாக கொண்டு விஜய் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது, அவரது கருத்தை பலரும் விமர்சனம் செய்தநிலையில் நடிகர் கருணாகரனும் அவரை கிண்டல் செய்யும் வகையில் பதிவுகளை வெளியிட்டு இருந்தார்.
இதைக்கண்ட விஜய் ரசிகர்கள் பெரும் கோபம் அடைந்து கருணாகரனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இதனால் கருத்து மோதல் ஏற்பட்டது. மேலும் விஜய் ரசிகர்கள் சிலர் கருணாகரனின் தொலைபேசி எண்ணை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
அதனை கொண்டு பலரும் கருணாகரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடுமையாக விளாச தொடங்கினர். மேலும் இதனால் அவர் காவல்நிலையத்தில் புகாரும் அளித்தார்.தொடர்ந்து இந்த சம்பவம் பூதாகரமாக வெடிக்கவே கருணாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறினார்.அவர் மீண்டும் ட்விட்டரில் இணைந்த பின்னரும் எவ்வித கருத்துக்களையும் பகிராமல் அமைதிகாத்து வந்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய்யிடம் மன்னிப்புக்கோரி கருணாகரன் பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
I actually don’t hate any one .I feel sorry I should not have used that word hate @actorvijayAnna one of my favourite he knows 👍🏻👍🏻I am sorry if I have hurt any one by words on social media... I mean it 🙏Sorry
— Karunakaran (@actorkaruna) 19 April 2019
அதில் நடிகர் விஜய்க்கு எதிராக வெறுக்கத்தக்க வார்த்தையை நான் பயன்படுத்தி இருக்க கூடாது. அதற்காக அவரிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். எனக்கு விஜய் ரொம்ப பிடிக்கும் அது அவருக்கே தெரியும் மேலும் நான் பயன்படுத்திய எந்த ஒரு வார்த்தையாவது யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.