கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
குடும்பப்பிரச்சனையில் விபரீதம்; மகனை கிணற்றில் தூக்கி வீசி, தாய் தற்கொலை.!
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, இனுங்கூர் ஊராட்சி, கீழ சுக்காம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் அருண். இவர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். அருணின் மனைவி லட்சுமி. தம்பதிகளுக்கு தர்சன், நிஷாந்த் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இவர்களில் தர்ஷன் அப்பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். கணவன் - மனைவி இடையே அவ்வப்போது குடும்பப் பிரச்சனை வந்ததாக தெரியவருகிறது. இதனிடையே, சம்பவத்தன்று நடந்த தகராறு காரணமாக, வருத்தமடைந்த லட்சுமி, இரண்டு மகன்களுடன் விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
இதையும் படிங்க: காதலில் விழுந்த தோழி.. மனஉளைச்சலில் சக மாணவி எடுத்த விபரீத முடிவு.. குமரி அருகே பரிதாபம்.!
தாய்-மகன் பலி
அங்கு கிணற்றை பார்த்தவாறு அமர்ந்திருந்த பெண்மணி, திடீரென மகன்களை கிணற்றில் வீசிவிட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். மூத்த மகன் தர்ஷன், மோட்டார் குழாய் கயிற்றில் சிக்கிக்கொண்டார். இதனால் அவர் நீரில் மூழ்கவில்லை. ஆனால், லட்சுமி மற்றும் நிஷாந்த் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த குளித்தலை காவல்துறையினர், தீயணைப்பு படையினர் உதவியுடன் ஒன்றரை மணிநேரம் போராடி லட்சுமி, நிஷாந்த் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தர்சனுக்கு குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற்னர்.
இதையும் படிங்க: அக்கம் பக்கத்தினரிடம் பேசக்கூடாது; தாய் கண்டித்ததால் 14 வயது சிறுமி தற்கொலை.!