அபிநந்தன் ஜாதி பற்றி பேசி சர்ச்சை!! சொம்புகளுக்கு மூக்குடைத்த நடிகை கஸ்தூரி!!



kasthuri-talk-about-abinandhan


பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இரண்டு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தபட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். மிக் 21 பைசன் போர் விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் என்பவரை கைது செய்த வீடியோவையும் வெளியானது.

தமிழகத்தை சேர்ந்த விமானப்படை வீரர் அபிநந்தன் வரதாமன் பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒட்டுமொத்த இந்திய மக்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.




இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டு உள்ளார். அதில், ''அபிநந்தன், சென்னையின் மகன். திருபணமூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். ஆச்சாரமான குடும்பத்தில் தந்தையும்  பரம் விஷிஸ்ட சேவா மெடல் வாங்கிய விமானப்படை வீரர்'' என்று தெரிவித்துள்ளார்.



 

இந்த சமயத்தில் ஜாதி பற்றி பேசுவதா என பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த நடிகை கஸ்தூரி, ''மனுஷத்தன்மையே இல்லாமல்  ராணுவத்தில் ரத்தம் சிந்தியவன் யாரும் ப்ராஹ்மணன்  இல்லை என்று கணக்கெடுக்கும் நன்றிகெட்ட திராவிட சொம்புக்களுக்கு  என் பதிவு கசக்கத்தான் செய்யும்'' என்று தெரிவித்துள்ளார்.