தன்னை விட 5 வயது இளைய நடிகரை மணக்கும் பிரபல முன்னணி நடிகை! வெளிவந்த சர்ப்ரைஸ் தகவல்!!



katrina-kaif-going-to-marry-with-actor-vicky-kowsal

பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைப்புக்கும் நடிகர் விக்கி கவுசாலுக்கும் வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. 

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை 
கத்ரீனா கைஃப். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த பூம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து அவர் தற்போது வரை பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

இந்த நிலையில் கத்ரீனா கைஃப் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்கி கௌசலை திருமணம் செய்துக்கொள்ள போவதாக தகவல்கள் பரவி வருகிறது. விக்கி கெளசல் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இருவருக்கும் வருகின்ற டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிக்ஸ் சென்சஸ் போர்ட் ஓட்டலில் 
திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து இருவரும் மௌனம் காத்து வருகின்றனர்.

katrina kaif

நடிகை கத்ரினா கைப் 1983ம் ஆண்டு பிறந்தவர். மேலும் நடிகர் விக்கி கெளசால் 1988ம் ஆண்டு பிறந்தவர். விக்கி கெளசால் கத்ரினா கைஃப் விட 5 வயது குறைந்தவர். ஆனாலும் இருவரும் ரகசியமாக காதலித்து வந்த நிலையில், டிசம்பர் மாதம் அவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.