#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மேடையில் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்ட கவின்! தீயாய் பரவும் வீடியோ!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் சாதனையும் படைத்தது. படத்தைப் போலவே அனிருத் இசையமைப்பில் அப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து பட்டையை கிளப்பியது.
அதிலும் குறிப்பாக வாத்தி கம்மிங் பாடலுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவானது. மேலும் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் வாத்தி கம்மிங் பாடலுக்கு கவின் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின் அதனைத் தொடர்ந்து அவர் கலந்து கொண்டு லாஸ்லியா உடன் காதல் சர்ச்சைகளில் சிக்கி மேலும் பிரபலமானார். இந்த நிலையில் அவர் தற்போது லிஃப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.