#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பட வாய்ப்பு இல்லாததால் கயல் ஆனந்தி எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
2012ம் ஆண்டு "பஸ் ஸ்டாப்" என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானவர் ஆனந்தி. தொடர்ந்து 3 தெலுங்குப் படங்களில் நடித்த இவர், 2014ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் "பொறியாளன்" திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து பிரபு சாலமனின் "கயல்" திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அந்தப் படத்தில் நடித்த பிறகு தான் இவர் 'கயல்' ஆனந்தி என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். தொடர்ந்து சண்டி வீரன், விசாரணை, திரிஷா இல்லனா நயன்தாரா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் 2021ம் ஆண்டு சாக்ரடீஸ் என்னும் தமிழ் உதவி இயக்குனரைத் திருமணம் செய்துகொண்டார் கயல் ஆனந்தி. இவர்களது திருமணம் தெலங்கானா மாநிலம் வாரங்கலில் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
தற்போது பட வாய்ப்புகளின்றி தவித்து வரும் கயல் ஆனந்தி, கருப்பு கலரில் கிளாமராக உடையணிந்து நடத்திய போட்டோஷூட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன்மூலம் குடும்பப் பாங்காக நடித்து வந்த அவர், இனி கிளாமராக நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.