#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"என் நிஜப் பெயர் ஆனந்தி இல்லை.!" 'கயல்' ஆனந்தி பேட்டி.!
நடிகை 'கயல்' ஆனந்தி, கயல் படத்தில் அறிமுகமானதால், படத்தின் பெயரை தன் பெயரோடு இணைத்து பிரபலமடைந்து விட்டார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், பிரபல தொலைக்காட்சியில் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.
அதில் பேசிய அவர், "தரமான, நல்ல படங்கள் பண்ணவேண்டும் என்பது என் ஆசை. கயல், பரியேறும் பெருமாள், கமலி போன்ற படங்கள் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தான் என்னை அணுகினார்கள்.
இப்படிப்பட்ட படங்களில் நடிப்பதையே நானும் விரும்புகிறேன். இவையெல்லாம் எனக்கே என்னை பிடித்த படங்கள். என் வீட்டில் என்னை மிகவும் கட்டுப்பாடோடு, பார்த்து பார்த்து வளர்த்தார்கள். என் நிஜப்பெயர் ரக்ஷிதா. பிரபு சாலமன் சார் தான் எனக்கு 'ஆனந்தி' என்று பெயர் வைத்தார்.
ஐந்து நாட்கள் புழுதி படிந்த ஆடையோடு நடித்தது, செருப்பு இல்லாமல் ஓடி திரிந்தது எல்லாமே எனக்கு வித்தியாசமான அனுபவங்கள். கடுமையான உழைப்பை பற்றி கயல் படத்தில் தான் தெரிந்து கொண்டேன். எல்லோருக்கும் என்னை பிடிக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை" என்று ஆனந்தி கூறியுள்ளார்.