#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னது..?? கயல் ஆனந்தியா!! தீயாய் பரவும் தகவல்! செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற கயல் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஆனந்தி. அப்படத்தைத் தொடர்ந்து அவர் கயல் ஆனந்தி என அழைக்கப்பட்டார். பின்னர் அவர் த்ரிஷா இல்லனா நயன்தாரா, சண்டிவீரன், விசாரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
கவர்ச்சி இல்லாமல் குழந்தைத்தனமான முகத்துடன் குடும்பபாங்கான தோற்றத்துடனேயே நடித்துவந்த கயல் ஆனந்தி தெலுங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்ற துணை இயக்குநரை கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். மேலும் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்தது.
இந்தநிலையில் கயல் ஆனந்தி தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளாராம். மேலும் அவரது வளைகாப்பு விழாவை மிகவும் கோலாகலமாக நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தகவல் பரவிய நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.