#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா! நடிகை கயல் ஆனந்தியின் திடீர் கல்யாணத்திற்கு பின்னாடி இப்படியொரு கதை இருக்கா! சர்ப்ரைசில் ரசிகர்கள்!
தமிழ்சினிமாவில் கயல் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஆனந்தி. அதனை தொடர்ந்து அவர் த்ரிஷா இல்லனா நயன்தாரா, சண்டிவீரன்,விசாரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்
இந்நிலையில் இவருக்கும் தெலுங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் சமீபத்தில் திடீரென எளிமையாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணவிழாவில் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஜே எஸ் கே சதீஷ், இயக்குனர் நவீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இது குடும்பத்தாரால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் என அனைவராலும் நினைக்கப்பட்ட நிலையில் தற்போது இது காதல் திருமணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கயல் ஆனந்தியின் கணவர் சாக்ரடீஸ் அவர்கள் மூடர் கூடம் பட இயக்குனர் நவீனின் மைத்துனராம். அதாவது மனைவி சிந்துவின் தம்பி ஆவார்.
நவீன் இயக்கிய அலாவுதீனின் அற்புத கேமரா என்ற படத்தில் சாக்ரடீஸ் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அப்பொழுது அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஆனந்திக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவீட்டாரும் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது என தகவல் பரவி வருகிறது.