#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா.. பாக்க சின்னப்பொண்ணு மாதிரி இருக்கும் நடிகை காயத்ரிக்கு இவ்ளோ பெரிய மகனா! வைரலாகும் புகைப்படம்!!
பிரபல தொலைக்காட்சிகளில் ஏராளமான சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் காயத்ரி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் பெருமளவில் இடம்பிடித்தார். அதனைத் தொடர்ந்து பல தொடர்களில் நடித்த அவர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் நடித்து வருகிறார்.
இத்தொடரில் மிர்ச்சி செந்தில் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக சரவணன் மீனாட்சி ரட்சிதாவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த தொடரில் காயத்ரி, செந்திலுக்கு தங்கச்சியாக அமைதியான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் சன் டிவியில் சித்தி 2 தொடரிலும் வில்லியாக நடித்து வருகிறார்.
இவ்வாறு குணச்சித்திர கதாபாத்திரத்திலும், கொடூர வில்லியாகவும் நடிப்பில் அசத்தகூடிய காயத்ரி யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இருவரும் தற்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் காயத்ரி கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது இதனை கண்ட ரசிகர்கள் பார்க்க சின்னபொண்ணு போல இருக்கும் காயத்ரிக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.