நிஜத்திலும் விஜய் ரியல் ஹீரோ தான்.. தப்பா பேசாதீங்க! தளபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்!!



kayathri-support-to-vijay

விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி  செய்திருந்தார். இந்தநிலையில் அந்த காரின் நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அவரது மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் அவருக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தது.

மேலும் வரி செலுத்துவது நன்கொடை அல்ல, கட்டாய பங்களிப்பு. நிஜத்திலும் ரியல் ஹீரோவாக இருக்கப் பாருங்கள் என விஜய்க்கு நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார். இந்த தகவல் பரவிய நிலையில்  #வரிகட்டுங்க_விஜய் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டானது. அதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவாக  #WeSupportThalapathyVijay என்கிற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கினர்.

kayathriஇந்த நிலையில் நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் விஜய்க்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில், விஜய் உண்மையான வாழ்க்கையிலும் ஹீரோதான். அவர் நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்துள்ளார். பிரதமர் மற்றும் முதல்வரிடம் கொரோனோ நிவாரண நிதி வழங்கியுள்ளார். பல மாணவர்களின் கல்விக்கு உதவி செய்துள்ளார். ரசிகர்களின் குடும்பங்களுக்கு உதவுகிறார்.

கோர்ட்டில் நடந்து முடிந்தவற்றை வைத்து மீடியா ஒருவரின் கேரக்டரை குறை சொல்லக்கூடாது. விஜய் செய்த உதவிகளை நாம் மறக்கக் கூடாது. காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்குதான் கேட்டார். நீதிமன்றம் அனுமதிக்காவிட்டால் அவர் வரியை கட்டப்போகிறார் என கூறியுள்ளார்.