வீட்டுக்குள்ள அடிதடி, வெளிய கொண்டாட்ட கும்மியடி.. இது பிக் பாஸ் தோழர்கள் சங்கம்.! வைரல் வீடியோ இதோ.!
கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் கீர்த்தி ஷெட்டி.. எந்த படத்தில் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தமிழில் முதன் முதலில் 'பருத்திவீரன்' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படமே மிகப் பெரும் வெற்றியடைந்து கார்த்தியின் நடிப்பு பாராட்டை பெற்றது.
மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியிருக்கிறார் கார்த்தி. இவ்வாறு பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக பெயர் பெற்றுள்ளார்.
சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருந்தார். இப்படத்தில் கார்த்தியின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில், நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பாதி நிறைவடைந்து நிலையில் தற்போது தெலுங்கு நடிகை கீர்த்தி செட்டி இந்த படத்தில் இணைந்திருக்கிறார். இவருக்கு எந்த மாதிரி கதாபாத்திரம் இந்த படத்தில் அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.