பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ரேவதி ஆகிறார் கீர்த்தி ஷெட்டி! கஸ்டடி படக்குழு புதிய அப்டேட்!
தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. தனது ஆரம்ப காலங்களில் கதாநாயகனாக நடித்து வந்த இவர் பின்னர் சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தவர். சமீபத்தில் இவரது இயக்கத்தில் எஸ் டி ஆர் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோரின் நடிப்பில் வெளியான மாநாடு படம் விமர்சன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது.
இதனைத் தொடர்ந்து இவர் தற்போது தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகனான நாகா சைதன்யாவை வைத்து கஸ்டடி என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் அரவிந்த்சாமி ஏற்கனவே வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இவர்களை தவிர பிரியா மணி, சம்பத்குமார், சரத்குமார், பிரேம்ஜி அமரன், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட நடிகர்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
இத்திரைப்படம் மூலம் முதல் முதலாக யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா ஆகியோர் இணைந்து இசையமைக்க உள்ளனர். மேலும் தற்போது இந்த திரைப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ரேவதி என்னும் கதாபாத்திரத்தில் கீர்த்தி ஷெட்டி நடிக்கயிருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.
இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழு அதில் கீர்த்தி ஷெட்டி ரேவதி என்னும் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஒரு வித்தியாசமான கதை களத்தில் மற்றும் ஒரு வெற்றிக்காக தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறது கஸ்டடி படக்குழு.