#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை கீர்த்திசுரேஷ்க்கு என்னாச்சு.! ஏன் இப்படி ஆகிட்டாங்க!! வைரலாகும் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்து நடித்த ரஜினிமுருகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய அளவில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.இவர் நடித்த நடிகையர்திலகம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பல பிரபலங்களும் இவருக்கு வாழ்த்து கூறினர்.
மேலும் விஜய், விக்ரம், விஷால் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், சர்க்கார் படத்திற்கு பிறகு நீண்ட ஓய்வில்இருந்தார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது போனிகபூர் தயாரிக்கும் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.மேலும் இவர் தெலுங்கில் அறிமுக இயக்குனர் நரேந்திரநாத் என்பவர் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் சமீபத்தில் தொடங்கப்பட்ட சைமா விருது விழாவில் கலந்து கொண்டுள்ளார்.உடல் எடை குறைந்த அவர் கருப்பு மற்றும் வெள்ளை நிற புடவை அணிந்து கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், அதனை கண்ட ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ்தானா இது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.