#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பயங்கர மாடர்னாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்! செம மாஸ் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் கீர்த்திசுரேஷ். விஜய், விஷால், சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். வெறும் ஆடல் பாடல் என்று மட்டும் இல்லாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
இவர் நடித்த மகாநடிகை படம் அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. கீர்த்தி சுரேஷின் நடிப்பை சினிமா பிரபலங்கள்கூட வியந்து பாராட்டினார்கள். கடைசியாக சர்க்கார் படத்திற்கு பிறகு ஓய்வில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக பாலிவுட் படத்தில் நடிக்க போவதாக செய்திகள் வெளிவந்தது.
அதுமட்டும் இல்லாமல் இயக்குனர் மணிரத்தினம் இயக்க இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படங்களில் சேலை, தாவணி என வலம்வரும் கீர்த்தி சுரேஷின் பயங்கர மாடர்னான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.