பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்! லேட்டஸ்ட் புகைப்படம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் ரெமோ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமா பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் கீர்த்தி சுரேஷ்.
தனி ஒரு நடிகையாக இவர் நடித்த நடிகையர் திலகம் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், பல்வேறு சினிமா பிரபலங்களும் இவரது நடிப்பை பாராட்டினர். கடைசியாக விஜய்க்கு ஜோடியாக சர்க்கார் படத்தில் நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.
தற்போது நீண்ட ஓய்வில் இருக்கும் இவர் அடுத்ததாக பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் கடந்த ஒருசில படங்களில் பார்ப்பதற்கு குண்டாக தோற்றமளித்த கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதால் உடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார். இதோ அவரது தற்போதைய புது புகைப்படம்.