பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இது சர்க்கார் தீபாவளி! சர்க்காரை வச்சு செய்ய காத்திருக்கும் கேரளா ரசிகர்கள்!
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ளது சர்க்கார் திரைப்படம். கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி சர்க்கார் திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டது. இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல் வசனங்கள்தான் தற்போது ஹாட் டாபிக்.
இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு சர்க்கார் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. படம் முழுவதும் அரசியல் பேசப்பட்டிருப்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது சர்க்கார் திரைப்படம். ஒருவழியாக திருட்டுக்கதை பிரச்னை சமரசமாக பேசி முடிக்கப்பட்ட நிலையில் தீபாவளிக்கு படம் வெளியாவதில் இருந்த சிக்கல் நீங்கியுள்ளது.
விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி,பழ.கருப்பையா, யோகிபாபு, ராதாரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் முதல்முறையாக கேரளாவில் இருக்கும் திரையரங்கு ஒன்றில் நாள் முழுக்க சர்கார் படம் திரையிடப்பட இருக்கிறது. அதில், திருச்சூரில் அமைந்துள்ள தளிக்குளம் கார்த்திகா தியேட்டரில் விஜய் ரசிகர்களின் மூலமாக தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு 8 காட்சிகள் வீதம் சர்கார் படத்தினை வெளியிட திட்டமிட்டு, காட்சி நேரங்களையும் பட்டியலிட்டுள்ளனர்.