பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஆனா அது வேற லெவல்.! நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கேஜிஎஃப் ராக்கி பாய்! என்ன தெரியுமா??
யாஷ் நடிப்பில் வெளிவந்து தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கேஜிஎஃப் 2. இதன் முதல் பாகம் செம ஹிட்டான நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுதும் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு உள்ளது. இந்தியா முழுவதும் கேஜிஎஃப் 2 முதல் நாள் வசூல் ரூ.134.5 கோடி என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தை பார்த்த பலரும் நடிகர் யாஷ் மற்றும் படக்குழுவிற்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் படம் வெளியான நாளில், கேஜிஎஃப் 2 படம் வெற்றியடையும், பாக்ஸ் ஆபீஸில் பல சாதனைகள் படைக்கும் என வாழ்த்து கூறியுள்ளார். இந்நிலையில் அவருக்கு நன்றி கூறும் வகையில் யாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் உங்களது டாக்டர் படத்தை பார்த்து மிகவும் என்ஜாய் செய்தேன். அது சிறந்த படம் என பாராட்டி சிவகார்த்திகேயனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதற்கு சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.