பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பிக்பாஸ் கவினை பார்த்து நடிகை குஷ்பூ சொன்ன ஒரு வார்த்தை..! அதிர்ச்சியில் உறைந்து போன கவின்.....
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் கவின். அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். பிக்பாஸில் கவின் சக போட்டியாளரான லாஸ்லியாவுடன் காதல் வயப்பட்டு, இவர்களுக்கு என தனி ஆர்மியும் உருவானது.
பின்னர் கவின் வெள்ளித்திரையிலும் களமிறங்கி நட்புனா என்னா தெரியுமா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதன் பின் லிப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். நேரடியாக ஓடிடியில் வெளியான இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது.
இந்நிலையில் லிப்ட் படத்தை தொடர்ந்து தற்போது அவர் ஆகாசவாணி என்ற வெப்தொடர் ஒன்றில் நடித்து இருக்கிறார். இந்த வெப்தொடர் ஆஹா தமிழ் என்ற ஓடிடி தளத்தில் வெளிவருகிறது. சமீபத்தில் தான் ஆஹா தளத்தின் துவக்க விழா நடைபெற்ற நிலையில், அந்த விழாவில் பேசிய நடிகை குஷ்பூ கவினை பற்றி மிக பெருமையாக பேசியுள்ளார். கவின் ஒரு ஸ்டார் ஆகிவிட்டார் என குஷ்பூ கூறியதும் கவின் பெரும் மகிழ்ச்சியடைந்து, ட்விட்டரில் பதிலளித்த கவின் நீங்கள் கூறியதை நினைத்து நான் இன்னும் அதிர்ச்சியில் தான் இருக்கிறேன் என கூறியுள்ளார்.
Wishing the best to you Kavin. #AkashVaani is looking very promising and entertaining. Congrats to you and the entire team. ❤👍🤗 @Kavin_m_0431 https://t.co/QsPFO5AGcq
— KhushbuSundar or NakhatKhan (@khushsundar) February 11, 2022