#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல தமிழ் நடிகருக்காக 10 வருடங்களுக்கு பிறகு இளையராஜாவுடன் இணையும் கே.ஜே யேசுதாஸ்.!
கே.ஜே.யேசுதாஸ், ஓர் இந்திய கர்நாடக இசைக் கலைஞரும் புகழ்பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார். அவர் தமது 50 ஆண்டுகள் திரைவாழ்வில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, அராபிய மொழி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய பல மொழிகளில் 40,000-க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார். சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் என்ற வகையில் வேறு எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில் ஏழு முறை தேசிய விருது பெற்றவர்.
இந்நிலையில், விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் ‘தமிழரசன்’ என்ற புதிய படத்தில் பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் இளையராஜாவுக்காக விஜய் ஆண்டனி படத்தில் பாடியுள்ளார்.
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கௌசல்யா ராணி தயாரித்து வரும் இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்து வருகிறார். மேலும் இதில் பூமிகா, சோனு சூட், யோகிபாபு, ரோபோ ஷங்கர், முனீஸ்காந்த், இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ், மலையாள நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள புரட்சிகரமான பாடலை கே.ஜே. யேசுதாஸ் சென்னை வந்து பாடி கொடுத்துள்ளார். 2009ம் ஆண்டு மம்முட்டி நடித்த பழசிராஜா என்ற மலையாள படத்தில் பாடிய ஜேசுதாஸ் அதற்கு பிறகு சினிமாவில் எந்த பாடலும் பாடாமல் இருந்து வந்தார். தற்போது இளையராஜாவுக்காக பாடியுள்ளது ‘தமிழரசன்’ படத்திற்கு கிடைத்த மிக பெரிய பெருமை என்று பலரும் கூறிவருகின்றனர்.