'கல்யாண வயசு' பாடல் யூடியூப்பில் இருந்து நீக்கம்; மியூசிக்கை காப்பி அடித்தாரா அனிருத்.!



kolamavu-kokila---kalyanavayasu-song---aniruth

அனிருத் இசையமைப்பில் கோலமாவு கோகிலா என்ற படத்தில் இடம்பெற்ற கல்யாண வயசு என்ற பாடல் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. வேறு இடத்திலிருந்து இந்தப்பாடலின் மியூசிக் காப்பி அடித்தாரா என்று பேசப்பட்டு வருகிறது. 

நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் கோலமாவு கோகிலா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் படத்தில் இடம்பெற்றிருந்த கல்யாண வயசு என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது.

aniruth

யூடியூப்பில் கிட்டத்தட்ட 60 மில்லியன் வியூகளை கடந்த இந்த பாடலை சோனி மியூசிக் சவுத் என்ற யூடியூப் சேனல் வெளியிட்டிருந்தது. தற்போது இந்த பாடல் யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலில் ஒரு பீட் மட்டும் பீட் பை மந்திரா என்ற நிறுவனம் காப்பி ரைட் வாங்கியுள்ளது எனவும் அது குறித்து தெரியாமல் அந்த பீட்டை தன் பாடலில் பயன்படுத்தி விட்டேன் என்று இந்த பாடல் வெளியான சமயத்தில் அனிருத் டுவிட் செய்து இருந்தார். அதற்கான லைசன்ஸ் வாங்கப்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. 



 

பீட் பை மந்திராவிடம் வாங்கிய லைசென்ஸ் காலம் முடிவடைந்திருக்கலாம் அதனால் கூட இந்த பாடல் நீக்கப்பட்டிருக்கலாம் எனவும் பேசப்படுகிறது. தற்போது அந்த பாடல் யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு அந்த காப்பிரைட் பிரச்சனை தான் காரணம் என சொல்லப்படுகிறது. 

டுவிட்டரில் இந்த பாடல் ஏன் நீக்கப்பட்டது என விளக்கம் கேட்டு ரசிகர்கள் சோனி மியூசிக் சவுத் சேனலை டேக் செய்து டுவிட் செய்து வருகின்றனர். இந்த பாடல் தற்போது வரை ஐடியூன்ஸில் இருந்தோ, திரைப்படத்தில் இருந்தோ நீக்கப்படவில்லை.