கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
#Breaking: கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவி பலாத்கார விவகாரம்; தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டினம், கந்திகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், என்.சி.சி பயிற்றுநராக வேலை பார்த்து வந்த முன்னாள் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நிர்வாகி சிவராமன், 12 வயது சிறுமி ஒருவரை என்.சி.சி கேம்ப்-பில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.
இந்த விவகாரம் குறித்த விசாரணைக்கு பின்னர் சிவராமன், சாம்சன், கோமதி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடந்த மொத்தமாக 13 க்கும் அதிகமான மாணவிகள் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில், இவ்விவகாரத்தில் விரைந்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது.
அரசு அறிவிப்பு
இதுகுறித்த அரசின் அறிவிப்பில், "கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கந்திகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், என்சிசி திட்டத்திற்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கான முகாம் பள்ளி நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. இந்த முகாமில் போலியான பயிற்றுநர்கள் கலந்து கொண்டு, அங்கு பயிலும் பள்ளி மாணவிகள் சிலரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஒரு தலை காதல் விவகாரம்.. தந்தையை கொன்று பெண்ணை கடத்தி சென்ற இளைஞர்!
இந்த விஷயம் தொடர்பாக பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து ஐந்து என்சிசி பயிற்றுநர்கள், பள்ளியின் நிர்வாகத்தினர் நான்கு பேர் என 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான சிவராமனுக்கு அடைக்கலம் கொடுத்து இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட விவகாரம் தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்து துரித விசாரணை மேற்கொண்டு 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என காவல்துறையின் தலைவர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்திடவும், சமூக நலத்துறை செயலாளர் தலைமையில் பல்நோக்கு குழு அமைத்திடவும் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த குழு 15 நாட்களுக்குள் வழக்கு விசாரணை உட்பட அனைத்தையும் விரைந்து முடிக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், அடுத்த மூன்று நாட்களுக்குள் கிருஷ்ணகிரி பள்ளி விவகாரம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தேசிய மகளிர் ஆணையமும் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகள் பலாத்காரம் விவகாரம்; தேசிய பெண்கள் ஆணையம் உத்தரவு.!