#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிம்புவின் தம்பி மனைவி இவர்தானா? முதன் முறையாக வெளியான அழகிய திருமண புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர் டி.ராஜேந்தர். இவர் இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், என பன்முக திறமைகளை கொண்டு விளங்கினார். இவருக்கு சிலம்பரசன்,குறளரசன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இவர்களில் ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன், பாண்டிராஜ் இயக்கிய இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல பாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஒருசில மாதங்களுக்கு முன்பு தங்களது பெற்றோரின் ஆசியோடு குறளரசன் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். அதனைத் தொடர்ந்து அவர் இஸ்லாமியப் பெண் ஒருவரை காதலிப்பதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் டி.ராஜேந்தர் திரையுலகை சேர்ந்த அனைவருக்கும் தனது இளைய மகன் குறளரசனின் திருமண பத்திரிக்கையை அளித்து வந்தார்.
அதனை தொடர்ந்து குறளரசன் -நபீலா அஹமத் ஆகியோரது திருமணம் சென்னை, அண்ணா நகரில் உள்ள மணமகள் வீட்டில் இஸ்லாமிய முறைப்படி 26 ந் தேதி நடைபெற்றது.அதனை தொடர்ந்து 29ஆம் தேதி இன்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் வரவேற்பு விழா நடைபெறுகிறது.
இதில் அனைத்து பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது