தற்போதுவரை நடிகை குஷ்புவிற்கு மிகவும் பிடித்த நடிகர் யார் தெரியுமா?



kushpoo's fav actor


குஷ்பு தமிழகத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதியும் ஆவார். நடிகை குஷ்பு 1980 ல் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 

1989 ஆம் ஆண்டு "வருஷம் 16 " என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். தமிழகத்தில் இன்றுவரை நடிகை குஷ்புக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனால் தான் குஷ்புவின் ரசிகர்கள் குஷ்புவிற்கு கோவில் கட்டி சிறப்பித்தனர்.

kushbu

தற்போது பிரபல தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும் நாம் ஒருவர் என்ற நிகழ்ச்சியை தொகுத்துவருகிறார் நடிகர் விஷால். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் யாரேனும் பிரபலங்கள் கலந்துகொள்வார். அவர்களோடு  ஏதேனும் ஒருவகையில் மிகவும் பாதிக்கப்பட்டு, உதவ யாரும் இல்லாமல் அவதிப்பட்டு வரும் மக்கள் கலந்துகொண்டுகொண்டு தங்களது கஷ்டங்களை பகிர்ந்து கொள்வர். 

kushbu

இதனை கேட்கும் பிரபலம் ஏதேனும் வேலை செய்து பணம் ஈட்டி , அதன்மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவார்கள். இந்த நிகழ்ச்சியில் கடந்தவாரம் நடிகை குஷ்பு கலந்துகொண்டார். அப்போது குஷ்புவிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் ஹீரோயினாக நடிக்குக்கும்போது உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டார். அடுத்த நொடியே நவரச நாயகன் கார்த்திக் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என கூறினார்.