#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடஅட தாறுமாறு.. அஸ்வினின் குட்டிபட்டாஸ் படைத்த வேற லெவல் சாதனை! குவியும் வாழ்த்துக்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மனதை பெருமளவில் கவர்ந்து பிரபலமானவர் அஸ்வின். இவர் கோமாளிகள் மற்றும் குறிப்பாக ஷிவாங்கியுடன் சேர்ந்து செய்யும் ரகளைகள் பார்ப்போரை ரசிக்க வைத்தது.
அஸ்வின் இதற்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ரெட்டைவால் குருவி என்ற தொடரில் நடித்திருந்தார். மேலும் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும், குறும்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து அவருக்கு ஹீரோவாக நடிக்க பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது.
4️⃣0️⃣ MILLION STRONG ❤️ #KuttyPattas rocking charts 🤩🥳➡️ https://t.co/zU2ykI7xev@TheRoute @noiseandgrains @i_amak @Reba_Monica @DhayaSandy @iamSandy_Off @Venki_dir @dop_harish @Jagadishbliss @rakshitaasuresh #APRaja #KuttyPattasHookStep pic.twitter.com/QKRxHBlk35
— Sony Music South (@SonyMusicSouth) May 4, 2021
இதற்கிடையில் அஸ்வின் குட்டி பட்டாஸ் என்ற மியூசிக்கல் ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். அவருடன் பிகில் பட நடிகை ரெபா மோனிகா ஜானுவும் நடித்திருந்தார். அந்த ஆல்பம் பாடல் யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பெருமளவில் ட்ரெண்டானது. இந்நிலையில் தற்போது இந்த பாடல் சமூகவலைத்தளத்தில் 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பெரும் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன்வாழ்த்து கூறி வருகின்றனர்.