#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தொலைக்காட்சியில் விட்டதை இணையத்தில் தொடரும் நடிகை! வெளியான புதிய தகவல்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை லெட்சுமி ராமகிருஷ்ணன். இந்த நிகழ்ச்சியில் மக்களின் பிரச்சனைகளை கேட்டு அதனை தீர்த்து வைக்கும் நடுவராக செயல்பட்டு வந்தார் லெட்சுமி ராமகிருஷ்ணன்.
இந்த நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடைப்பெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சிக்கு எதிராக வழக்கு தொடுத்தனர். இதனால் இந்த நிகழ்ச்சி தடை செய்யப்பட்டது. இதனால் ஜீ தமிழின் டி. ஆர். பியும் குறைந்துள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய லெட்சுமி ராமகிருஷ்ணனும் படவாய்ப்புகள் குறைந்த இருந்த வந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தொலைக்காட்சியை விடுத்து இணையத்தில் புதிதாக ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதாவது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை போன்று இணையத்தில் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற புதிய நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.