#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
லெஜெண்டை தொடர்ந்து அல்ட்ரா லெஜண்ட் ஆகிறாரா லலிதா ஜுவல்லரி ஓனர்?.. என்ன கூறினார் தெரியுமா?..!!
சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமடைந்தவர் கடை உரிமையாளர் சரவணன் அருள். இவர் விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான தி லெஜன்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக ஊர்வசி ரௌடல்லா நடித்திருக்கிறார். சரவணன் ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடித்து, தயாரித்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த நிலையில், கடந்த ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் மட்டுமே இதுவரையிலும் சுமார் 7.7 கோடி வசூல் எட்டியுள்ளது. இந்த நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணனை தொடர்ந்து, பிரபல நகைக்கடை உரிமையாளரான கிரண்குமார் விரைவில் கதாநாயகனாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியிருந்தது.
இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பவே, இதற்கு பதிலளித்த கிரண் குமார், தனக்கு அப்படி எந்த ஒரு எண்ணமும் இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும் கிரண்குமார் தனது நகை கடை விளம்பரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.