"சம்பளத்தை குறைத்ததால் கடுப்பாகி படத்தில் இருந்து விலகிய நயன்தாரா!" சூப்பர் ஹிட்டான படம்!



Latest news about nayanthara movie

2005ம் ஆண்டு "ஐயா" திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நயன்தாரா. தொடர்ந்து சந்திரமுகி, சிவகாசி, கஜினி, கள்வனின் காதலி, வல்லவன், சிவாஜி, பில்லா, யாரடி நீ மோகினி, சத்யம், ஏகன், வில்லு, ஆதவன், ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Nayan

"லேடி சூப்பர்ஸ்டார்" என்று அழைக்கப்படும் நயன்தாரா, பல படங்களில் நடிக்க மறுத்து உள்ளார். அவர் மறுத்த படங்களில் வேறு நடிகைகள் நடித்து அந்த படம் மெகா ஹிட்டானதும் உண்டு. அப்படி நயன்தாரா மறுத்து, மெகா ஹிட்டான ஒரு திரைப்படம் தான் "பையா".

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படத்தில் கார்த்திக்கு ஜோடியாக முதலில் நயன்தாரா தான் நடிக்க வந்தாராம். ஆனால் படப்பிடிப்பின்போது நயன்தாராவின் முந்தைய திரைப்படம் சரியாக போகாததால் சம்பளத்தை குறைத்து தயாரிப்பதாக கூறினார்.

Nayan

அதனால் கடுப்பான நயன்தாரா, "என்னுடைய வேலையை சரியாக செய்யவில்லையென்றால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கும். ஆனால் காரணமே இல்லாமல் சம்பளத்தை ஏன் குறைக்கிறீர்கள்?" என்று கூறி படத்தில் இருந்து விலகிவிட்டதாக லிங்குசாமி பேட்டியொன்றில் கூறியிருந்தார்.