பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"ரஜினியை பதட்டமடையச் செய்யும் விஷயம் இது தான்! பிரபலம் சொன்ன ரகசியம்!
கர்நாடகாவில் பெங்களூரு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக வேலை பார்த்துக்கொண்டிருந்த சிவாஜிராவ் கெய்க்வாட், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கிய "அபூர்வ ரகங்கள்" திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
தன்னுடைய ஸ்டைலான நடிப்பின் மூலம் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ள ரஜினிகாந்த், தற்போது ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஜாக்கி சானுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.
ஒரு சாதாரண காட்சியைக் கூட தன் பாணியில் ஸ்டைலாக நடித்து அனைவரையும் கவர்ந்துவிடும் திறமை உள்ள ரஜினிகாந்த், ஒரே ஒரு விஷயத்திற்கு மட்டும் மிகவும் பயந்து பதட்டமடைந்து விடுவாராம். இதுகுறித்து நடன இயக்குனர் பிரபுதேவா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
அவர் கூறியதாவது, "இதுவரை 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ரஜினிகாந்த், நடனக் காட்சி என்றால் மட்டும் பதட்டமடைந்து விடுவார். உங்களுக்கு தெரிந்த ஸ்டெப் போடுங்கள் என்று கூறினாலும், பயமாக இருக்கிறது என்று கூறுவார். நடனம் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளார்" என்று கூறியுள்ளார்.