#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜெயம் ரவியின் இறைவன் படம் தோல்வியா.! ஜெயம் ரவி தான் காரணமா.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் இறைவன்.
சைக்கோ திரில்லர் கதைகளை கொண்ட 'இறைவன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சர்டிபிகேட் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில், இறைவன் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஜெயம் ரவி, நயன்தாரா ஜோடியின் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தந்தது என்றே சொல்லலாம்.
மேலும் இப்படம் தோல்வி அடைந்தால் ஜெயம் ரவி தான் காரணம் என்று பலர் பேசி வருகின்றனர். இதற்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் குழந்தைகளுடன் இப்படத்திற்கு வராதீர்கள் என்று ஜெயம் ரவி கூறியதனால் தான் 'இறைவன்' திரைப்படத்திற்கு அதிக கூட்டம் வரவில்லை என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.