கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
"துரோகத்திற்கு தண்டனை மரணம்.." வக்கீல் எரித்து கொலை.!! சரணடைந்த குற்றவாளி.!!
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் சரணடைந்த நபரிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
வழக்கறிஞர் எரித்து கொலை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்டோபர் என்பவர் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் கிறிஸ்டோபரின் வீடு புகுந்து அவரை கொலை செய்தார். மேலும் அவரது உடலை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு எடுத்து வந்து தீ வைத்து எரித்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
காவல் நிலையத்தில் சரண்
வக்கீலை கொலை செய்த பின் இசக்கிமுத்து காவல் நிலையம் சென்று சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் எரிந்த வழக்கறிஞரின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர். மேலும் சரணடைந்த குற்றவாளியிடம் விசாரணையை தொடங்கினர்.
இதையும் படிங்க: #Breaking: சென்னையில் போதைப்பொருள் சாம்ராஜ்யம்.. ரியல் "கோலமாவு கோகிலா" கைது., திரைப்படத்தை மிஞ்சும் உண்மை உள்ளே.!
துரோகத்திற்காக கொலை செய்ததாக வாக்குமூலம்
இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் கிறிஸ்டோபர் தனக்கு துரோகம் செய்ததால் அவரை கொலை செய்ததாக இசக்கி முத்து தெரிவித்திருக்கிறார். தனது வழக்கு தொடர்பாக வக்கீல் கிறிஸ்தோபர் துரோகம் செய்ததால் அவரை கொன்றேன் என இசக்கிமுத்து வாக்குமூலம் அளித்திருக்கிறார். இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: 2 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்; தலைமறைவான அரசியல்கட்சி பிரமுகருக்கு காவல்துறை வலைவீச்சு.!