#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"இணையத்தில் வெளியான லியோ திரைப்படம்!" திடீர் பரபரப்பு!
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று வெளியான திரைப்படம் "லியோ". மேலும் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், கெளதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
உலகெங்கிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது லியோ திரைப்படம். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அதிகாலை சிறப்புக்காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நீதிமன்றத்திற்கு சென்றும், அரசு அனுமதிக்காததால் காலை 9 மணிக்கு தான் முதல் ஷோ தொடங்கியது.
இந்நிலையில், படம் வெளியாவதற்கு முன்னமே "லியோ" படத்தின் முக்கியக் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜய் ஹய்னாவுடன் இருக்கும் காட்சி தான் இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
படம் ரிலீஸாவதற்கு முன்பே படத்தின் முக்கியமான ஓப்பனிங் காட்சி இணையத்தில் வெளியானதால், படக்குழு மிகவும் அதிர்ச்சியில் உள்ளதாகத் தெரிகிறது. தற்போது அந்த காட்சி இணையத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது.