வீட்டுக்குள்ள அடிதடி, வெளிய கொண்டாட்ட கும்மியடி.. இது பிக் பாஸ் தோழர்கள் சங்கம்.! வைரல் வீடியோ இதோ.!
"நடிகர் விஷாலின் பேச்சால்தான் எனக்கு இந்த நிலைமை" பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் பரபரப்பு பேட்டி..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். ஆக்சன் ஹீரோவாக வலம் வரும் விஷால் திரைத்துறையில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியுள்ளார்.
சில வருடங்களாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர் தோல்வியை அடைந்து வந்தன. இதனை அடுத்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் கதாநாயகனாக விஷால் நடித்திருந்தார். மிகப்பெரும் வெற்றி அடைந்த இப்படம் ரசிகர்களின் பாராட்டை பெற்றது.
இது போன்ற நிலையில், மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்த விஷால், லோ பட்ஜெட் திரைப்படங்களை தயாரிக்காதீர்கள் ஏற்கனவே நிறைய படங்கள் திரையில் வெளிவராமல் இருக்கின்றன. லோ பட்ஜெட்டில் திரைப்படத்தை தயாரிப்பதற்கு பதில் ஏதாவது இடத்தை வாங்கி போட்டு பிசினஸ் செய்யலாம் என்று கூறியிருந்தார். இப் பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து இயக்குனரும், நடிகருமான லிவிங்ஸ்டன் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அவர் கூறியதாவது, "விஷால் ஏன் இப்படி பேசினார் என்று தெரியவில்லை. விஷால் ஒரு நல்ல மனிதர். இவர் பேசிய பேச்சால் என் திரைப்படம் பாதியில் நின்று விட்டது. தயாரிப்பாளர் இனி தயாரித்து நஷ்டம் அடைய முடியாது" என்று கூறிவிட்டார். இப்பேட்டி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.