லோகேஷ் கனகராஜை அடித்த ரசிகர்கள்.. காயமடைந்து மருத்துவமனையில் அனுமதியா.?



Lokesh kanagaraj fans meet

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ்.  இவர் தமிழில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்திருக்கிறார். மேலும் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் எனும் புதுவிதமான டெக்னிக்கை ஆரம்பித்து வைத்தவர் லோகேஷ் தான்.

Lokesh

தனக்கென தனிவிதமான ரூட்டை பிடித்து சினிமாவில் தனித்து காணபடும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். குறிப்பிட்டு 10 படங்கள் தான் இயக்குவேன். இதன்பின் சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்று கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் 'லியோ இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் திரையரங்கில் வெற்றி நடை போட்டு வருகிறது லியோ திரைப்படம்.

Lokesh

இது போன்ற நிலையில், இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கேரளாவில் ரசிகர்களை சந்திப்பதற்காக ஏற்பாடு செய்திருந்தார். அங்கு சென்றபோது கூட்ட நெரிசலால் லோகேஷ் கனகராஜிற்கு காயமானது. இதனால் ரசிகர்களை சந்திப்பதை தற்காலிகமாக தள்ளி வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.