#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடுத்தடுத்தாக குவியும் படவாய்ப்புகள்! லாஸ்லியாவின் அடுத்த படம் இவருடன்தானா!! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான இவருக்கென பெரும் ஆர்மி உருவானது. மேலும் அதனைத் தொடர்ந்து தற்போது லாஸ்லியாவிற்கு ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.
லாஸ்லியா முதன் முறையாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து ப்ரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு நண்பராக சதீஷ் நடித்துள்ளார்.மேலும் அவர்களுடன் மிரட்டலான கதாபாத்திரத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் இணைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து லாஸ்லியா ஆரிஅர்ஜுனுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இந்த இரு படங்களின் படப்பிடிப்புகள் முடிவடையாத நிலையில் லாஸ்லியா தற்போது மரகத நாணயம், ஓ மை கடவுளே போன்ற படங்களை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். த்ரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் லாஸ்லியாவிற்கு ஜோடியாக பூரணேஷ் என்பவர் அறிமுகமாக உள்ளார்.