#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ்.. புடவையில் செம ஹோம்லியாக, சும்மா சிக்கென இருக்கும் லாஸ்லியாவை பார்த்தீர்களா! சொக்கிப்போன ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சில நாட்களிலேயே பட்டாம்பூச்சி போல் சுற்றி திரிந்து அவருக்கு பெரும் ஆர்மியே உருவானது. இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளரான கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கி விமர்சனங்களை சந்தித்தார்.
பின்னர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாஸ்லியாவின் அப்பா அவரை கண்டித்ததை தொடர்ந்து அவர் போட்டியில் கவனம் செலுத்த துவங்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் கிடைத்தது. அவர் ஹர்பஜன் சிங்குடன் பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் புகழ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது சற்று உடல் எடை குறைந்து புடவையில் செம ஹோம்லியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் மிகவும் அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.