#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நேற்று அண்ணன்.. இன்று நண்பன்.. நாளை காதலனா? லாஸ்லியா கூறிய பதிலால் குழப்பத்தில் நெட்டிசன்கள்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. இவரது குழந்தை போன்ற பேச்சு, அழகான சிரிப்பு பலரையும் கவர்ந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த சில நாட்களில் இவருக்கு ஆர்மி உருவானது.
மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் லாஸ்லியாவிற்கு சினிமாவில் வாய்ப்புகளும் குவிந்தன. அவர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்த பிரெண்ட்ஷிப் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவர் தற்போது பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் பிரஸ் மீட் நடந்த நிலையில், லாஸ்லியா தர்ஷனை தனது நண்பன் என்று கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷனை அண்ணன் என்று அழைத்து வந்த லாஸ்லியா தற்போது நண்பன் என கூறியுள்ளதால் ரசிகர்கள் படு குழப்பத்தில் உள்ளனர்.
மறுபுறம், நேற்று அண்ணன் என்று அழைத்த லாஸ்லியா இன்று நண்பன் என்று அழைக்கிறார். நாளை காதலன் என்று அழைப்பாரோ..? எனவும் கேட்டு வருகின்றனர்.