லவ் டுடே பட நடிகை இவானாவை கடுப்பாக்கிய அந்த மாதிரி கேள்வி..



Love today actress Ivana interview

அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கராஜன் இயக்கிய 'லவ் டுடே' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இவானா. இவர் 2019ல் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான "நாச்சியார்" படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகை விருதைப் பெற்றுள்ளார்.

Ivana

தற்போது டோனி என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்த எல் ஜி எம் திரைப்படத்தில், ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்திருந்தார்.

சமீபத்தில் இவரளித்த பேட்டி ஒன்றில் இவானாவிடம், " நீங்கள் எந்த நடிகருடன் நடிக்க விரும்புகிறீர்கள்" என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இவானா, " மலையாளத்தில் மோகன்லாலுடனும், தமிழில் விஜயுடனும் நடிக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.

Ivana

மேலும் இவரிடம், "எந்த கேள்வி உங்களை எரிச்சலடையச் செய்யும்" என்று கேட்டதற்கு, "புகைப்படத்தில் பெரியதாக இருக்கும் நீங்கள், நேரில் ஏன் குட்டியாகத் தெரிகிறீர்கள் என்று கேட்பது தான் என்னை மிகவும் எரிச்சலடையச் செய்யும்" என்று இவானா கூறினார்.