#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கோடிகளில் சம்பளத்தை கேக்கும் லவ் டுடே பட நடிகர்.. அதிருப்தியில் தயாரிப்பாளர்கள்..
2019ஆம் ஆண்டு "கோமாளி" திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். தெடர்ந்து 2022ம் ஆண்டு "லவ் டுடே" படத்தை இயக்கி, நடிகராகவும் களமிறங்கினார். முன்னதாக இவர் "வாட்சப் காதல்" உள்ளிட்ட பல குறும்படங்களை இயக்கியுள்ளார்.
இவர் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து சில தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுக்கு ஒரு படம் செய்து கொடுக்குமாறு பிரதீப் ரங்கநாதனை அணுகினார்களாம். ஆனால் அவர் 20கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பிரதீப் ரங்கநாதனிடம் கதை சொல்லப்போகும் தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடுவதாகவும், மேலும் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்கவும் 20கோடி சம்பளம் கேட்டுள்ளதாகவும், ஆனால் எந்த நிறுவனமும் இந்தப் படத்தை தயாரிக்க முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்ததாகவும், ஆனால் பணப்பிரச்சனை காரணமாக அந்நிறுவனம் விலகுவதாகவும், தற்போது விக்னேஷ் சிவனே தனது கையிலிருக்கும் காசைப் போட்டு படத்தை தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.