பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சூர்யாவின் காக்க காக்க படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது இந்த முன்னணி நடிகரா! இப்படி மிஸ் பண்ணிட்டாரே!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. இவர் ஏராளமான சூப்பர் ஹிட் மற்றும் மாஸ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு என பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. இறுதியாக சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
சூர்யாவின் திரைவாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்த முக்கிய திரைப்படம் காக்க காக்க. இந்த திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கி இருந்தார். இதில் சூர்யா செம கெத்தான IPS கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இதில் சூர்யாவிற்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பார்.காக்க காக்க திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.
இயக்குனர் கௌதம் மேனன் முதலில் இத்திரைப்படத்தில் நடிகர் மாதவனைதான் ஹீரோவாக நடிக்க வைக்க தேர்வு செய்துள்ளார். ஆனால் ஒரு சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனதாம். பின்னரே இறுதியாக சூர்யா இப்படத்தில் நடிக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இதற்கிடையில் விக்ரம் மற்றும் அஜித்திடம் இதில் ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது.