கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஓட்டலில் வாங்கிய சிக்கன் கிரேவியை மறுநாள் சுடவைத்து சாப்பிட்ட இளைஞர் பலி.. மதுரையில் சோகம்.!
மதுரை மாவட்டத்தில் உள்ள கோசகுலம் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தராஜ். இவர் நேற்று முன்தினம் இரவில் சாப்பிட சிக்கன் கிரேவி கடையில் வாங்கி சாப்பிட்டு இருக்கிறார். இதில் மீதமிருந்த கிரேவியை அவர் வீட்டிலேயே வைத்துக்கொண்டுள்ளார்.
பின்னர் மறுநாள் காலையில் வீட்டில் செய்யப்பட்ட உணவை சாப்பிட தயாரான ஆனந்தராஜ், ஓட்டலில் வாங்கிய சிக்கன் கிரேவியை சுடவைத்து சாப்பிட்டு இருக்கிறார். உணவு சாப்பிட்ட சிறிதுநேரத்திற்குள் அவருக்கு வாந்தி & வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தாத்தா-பேரனின் உயிரை பறித்த மின்சாரம்; எமனாக மாறிய ஃபேன் சுவிட்ச்.! கரூரில் சோகம்.!!
ஓட்டல் உணவு உயிர்பறித்தது
இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஓட்டலில் வாங்கிவந்த சிக்கனை மறுநாள் வரை வைத்து, அதனை சுடவைத்து சாப்பிட்டதே மரணத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உணவு மாதிரியும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: திருமணமான ஒரேநாளில் உயிரிழந்த மணமகன்; பெண்ணின் வாழ்க்கையில் நடந்த அடுத்தடுத்த சோகங்கள்.!