முதல் மனைவி விபத்தில் பலி..! அடுத்ததாக அம்மா மரணம்..! 2வது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த முத்து வீட்டில் அடுத்த மரணம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!



madurai-muththu-father-passes-away

தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான காமெடியன்களில் ஒருவர் மதுரை முத்து. சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்களில் நடிக்காவிட்டாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும்  மதுரை முத்து.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு மூலம் பிரபலமான இவர் நீண்ட வருடங்களாக சன் தொலைக்காட்சியில் பணியாற்றிவந்தநிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் காமெடி நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராக இருந்து வருகிறார்.

madurai muthu

இந்நிலையில் மதுரை முத்துவின் தந்தை ராமசாமி வயது மூப்பு மற்றும் ஒருசில உடல்நல கோளாறு காரணமாக சில நாட்களுக்கு முன்னர் மரணமடைந்தார். இதற்கு முன்னதாக மதுரை முத்துவின் முதல் மனைவி சில வருடங்களுக்கு முன்னர் கோவிலுக்கு சென்றுவரும் போது கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

madurai muthu

இதனை அடுத்து தனது முதல் மனைவியின் தோழி ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு சந்தோசமாக குடும்பம் நடத்திவந்தநிலையில் கடந்த வருடம் தாயையும் பறிகொடுத்தார். தற்போது இவரது தந்தையும் உடல்நல சரியில்லாமல் இறந்துள்ளார். தொடர் இழப்புகளை சந்தித்துவரும் மதுரை முத்துவிற்கு பலரும் தங்கள் வருத்தத்தையும், இறங்கல்களையும் தெரிவித்துவருகின்றனர்.